சிறுதானிய ஆண்டை முன்னிட்டு உணவு மற்றும் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற பேரணி..!
திருவண்ணாமலையில் சிறுதானிய ஆண்டை முன்னிட்டு உணவுத்துறை மற்றும் மருத்துவத்துறை சார்ந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
சிறுதானிய ஆண்டை முன்னிட்டு அண்ணா சதுக்கம் முதல் காந்திநகர் மைதானம் வரை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த இருசக்கர வாகன பேரணியில் மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





