மீண்டும் வந்த டபுள் டக்கர் பேருந்து.. மக்கள் உற்சாகம்..!
கோவை விழாவில் டபுள் டக்கர் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் 8ம் தேதி வரை கோவை விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவில் மாரத்தான் திரு ஓவியம் கலாச்சார நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. கோவை விழாவில் ஒரு பகுதியாக கோவை மாநகர சுற்றி பார்க்கும் வகையில் டபுள் டக்கர் பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் தொடங்கி வைத்தார்.
வஉசி பார்க், டபுள் டக்கர் பேருந்து சேவை முக்கிய சாலை வழியாக பயணித்து மீண்டும் வஉசி பார்க் சென்று, ஜனவரி 8ஆம் தேதி வரை இந்த பேருந்தில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணிக்கலாம். டபுள் டக்கர் பேருந்தில் பயணிக்க பொதுமக்கள் அதற்கான செயலியை முன்பதிவு செய்ய வேண்டும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





