--- --:--:-- --

சிறுநீரகத்தில் இருந்த 300 கற்கள்.. தண்ணீர் குடிக்க பிடிக்காததால் பபுல் டீ குடித்த பெண்..!

6

பபுள் டீயை விரும்பி சாப்பிட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளன. தைவான் நாட்டைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவரது உடல் ஸ்கேன் செய்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் அதிக அளவு கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டன.

 

தண்ணீர் குடிக்க பிடிக்காததால் இளம்பெண் அதிக அளவில் பபுல் டீ கொடுத்ததா என்றும் அதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகியுள்ளதா எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இளம்பெண் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon