வேலைக்கு சென்ற இடத்தில் சிக்கிக்கொண்ட இளைஞர்கள்..!
திருவண்ணாமலையிலிருந்து சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் தங்களை மீட்க கோரி சமூக வலைதளத்தில் காணொளி பதிவிட்டுள்ளனர்.
அக்கப்பட்டு கிராமத்தில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக சென்ற சிவகுமார், அஜித்குமார் ஆகிய இளைஞர்கள் அங்கு கடும் சிரமங்களை சந்திப்பதாக வேதனையோடு காணொளியை பதிவிட்டுள்ளனர்.
அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் 15 மணி நேரத்திற்கும் கூடுதலாக வேலை செய்ய சொல்லி நிறுவனத்தார்கள் வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
உணவு சரிவர வழங்கப்படவில்லை எனவும் நிறுவனத்தாரிடம் கேட்டால் பாஸ்போர்ட் பிடுங்கி வைத்து கொண்டு மிரட்டுவதாகவும் அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தங்களை மீட்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.






