--- --:--:-- --

திருப்பதி ஏழுமலையானுக்கு உண்டியல் காணிக்கையை கொட்டிக்கொடுத்த பக்தர்கள்..!

10

ழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிக்கணக்கானோர் தினசரியும் திருப்பதி வந்து செல்கின்றனர். பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து சில நிமிட நேரம் தரிசனம் செய்தாலும் மன திருப்தியுடன் செல்கின்றனர் பக்தர்கள்.

 

கடந்த ஆண்டு அதிக பட்சமாக ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.139.35 கோடி உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி ரூபாய் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தினர். ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

 

கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளது.2023ஆம் ஆண்டு ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 123 கோடி ரூபாயும், பிப்ரவரி மாதம் 114 கோடி ரூபாயும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

 

மார்ச் மாதம் 120 கோடி ரூபாயும், ஏப்ரல் மாதம் 114 கோடி ரூபாயும், மே மாதம் 109 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. ஜூன் மாதம் 116 கோடி ரூபாயும், ஜூலை மாதம் 120 கோடி ரூபாயும் காணிக்கையாக கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் ரூ.108 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.

 

திருப்பதியில் கடந்த நவம்பர் மாதம் கிடைத்த ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை வருமானம் ரூ.108 கோடி ஆகும். கடந்த நவம்பர் மாதம் 19.73 லட்சம் பக்தர்கள் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்ட நிலையில் அவர்கள் கோவில் உண்டியலில் 108.46 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் இதுவரை மொத்தம் 1274 கோடி ரூபாய் இதுவரை வருமானமாக கிடைத்துள்ளது.

Right Menu Icon