--- --:--:-- --

காதலிக்காக மதம் மாறிய காதலன்.. வேறொருவரை திருமணம் செய்த காதலி..!

9

காதலிக்காக மதம் மாறிய காதலன். காதலி சொன்ன வார்த்தையால் மனம் உடைந்து ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாமாங்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்ற பட்டதாரி இளைஞர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் காதலியின் வற்புறுத்தலால் அவரது மதத்திற்கு ஸ்ரீதர் மாறியதாக கூறப்படுகிறது.

 

இதனுடைய திடீரென காதலியின் தொடர்பு துண்டித்ததால் ஸ்ரீதர் அவரைத் தேடி அலைந்து உள்ளார். அப்பொழுது காதலியின் செல்போன் எண் கிடைக்க அந்த எண்ணுக்கும் ஸ்ரீதர் போன் செய்து பேசியுள்ளார்.

 

எதிர்மறையில் இருந்து பேசிய காதலி தனக்கு திருமணமாகி தான் கர்ப்பமாக இருப்பதாக கூற ஸ்ரீதர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon