எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன்..!
சென்னை எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் கச்சா எண்ணெயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் வெள்ளநீருடன் கச்சா எண்ணெய் கழிவுகளும் கலந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் வீடு, வாகனங்கள் வீடுகளில் இருந்த பொருட்களில் கறை படிந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை எர்ணாவூர் கச்சா எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணைய ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார்.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.






