வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்..கடித்து குதறிய நாய்
கடலூர் மாவட்டம் கோதனூரில் தெருவில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முகம் மற்றும் கால்களை கடித்து குதறியது. பின்னர் தெருவுக்கு ஓடி சென்று மேலும் 4 பேரை கடித்து விட்டு தப்பி ஓடியது.






