விபத்தில் சிக்கியதை பெற்றோரிடத்தில் சொல்லாத சிறுவன்பலி .!
நாமக்கல் மாவட்ட பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மகபூத் பாஷா. இவருக்கு லாரன்ஸ் என்று 8 வயதில் மகன் உள்ளார். கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதற்காக சிறுவன் சாலையை கடக்க முயன்றுள்ளான்.
அப்பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று சிறுவன் மீது மோதியது, இதில் சிறுவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார், அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சிறுவனை சேர்க்காமல் ஆசுவாசப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு சென்ற சிறுவன் விபத்தில் சிக்கியதை கூறினால் பெற்றோர்கள் திட்டுவார்களோ என்று பயந்து கூறாமல் விட்டுள்ளான். இந்நிலையில் பத்தாம் தேதி காலை சிறுவனின் உடல்நிலை மோசமாகியுள்ளது. பதறி போன பெற்றோர்கள் சிறுவனை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து போனது குறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை மகபூது பாஷா அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





