சேறும், சகதியும் ஆக இருக்கும் பள்ளி.. மக்கள் அச்சம்..!
சேறும், சகதியாக காட்சியளிப்பதால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட மேல் மாநகர் பகுதியில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் மழை, வெள்ளம் தேங்கி மனித நிலையில் தற்போது சகதிக்கான பள்ளி வளாகம் காட்சியளிக்கிறது.
வழுக்கு விடும் வகையில் உள்ள பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் மற்றும் பொறுமையுடனே நடந்து உள்ளே சென்றனர். இதனிடையே பெற்றோர் ஒருவர் சுகாதாரம் இல்லாமல் இருப்பதால் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப அஞ்சி மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





