3வது மாடியில் இருந்து கீழே விழுந்து மருத்துவ மாணவி பலி..!
கேரளாவில் டாக்டர் சகானா தற்கொலை செய்து கொண்ட நிலையில் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கோகுலம் மருத்துவக் கல்லூரியில் அதிதி என்பவர் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார்.
இரு வாரங்களுக்கு முன்பு ஹாஸ்டலில் இருந்து வெளியேறி தனியாக வீடு எடுத்து தன் தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஹாஸ்பிடல் இருந்த புத்தகங்களை எடுக்க வந்ததாக தெரிகிறது. அப்போது திடீர் என்று மூன்றாம் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார்.
இதை பார்த்த சக மாணவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அதிதி சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார்.
அதை வேளையில் படிப்பு காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





