--- --:--:-- --

ஜப்பானில் உயிரிழந்து கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்..!

5

ஜப்பானில் டன் கணக்கில் மீன்கள் செத்து கரை ஒதுங்கிய வடக்கு ஜப்பானின் அக்கொடைட் கடற்கரையில் டன் கணக்கில் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. அக்காய் தீவு பகுதியில் உள்ள அகோரி கடற் பகுதியில் திடீரென்று இலட்சக்கணக்கான மீன்கள் இருந்தன.

 

இதனால் கடற்கரை முழுவதும் மீன்கள் மயமாக காட்சி அளித்தது. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் மீன்களை சேகரித்து விற்பனை செய்ய தொடங்கினர். எனினும் அவற்றை சாப்பிட வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 

இவ்வளவு மீன்கள் இறந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அணு உலையில் இருந்து கதிர்வீச்சு தண்ணீரில் கலக்கப்பட்டதால் ஏற்படுத்தப்பட்ட விளைவாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

 

இதனிடையே சம்பவ இடத்திற்கு சென்ற மின் ஆராய்ச்சியாளர்கள் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வு முடிவு வெளியான பிறகு மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon