பிளான் பண்ணி திருடிய நபர் தர்மடி கொடுத்த மக்கள்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி என்பவர் தனது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. பீரோவில் இருந்து 20 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் 40,000 பணம் ஆகியவை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அருகே மளிகை கடையில் பொருட்களை திருடிய இளைஞர் சிசிடிவி கேமராவால் பிடிபட்ட நிலையில் பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.






