--- --:--:-- --

தடுப்பணையில் குளிக்கச் சென்ற 10ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி மாயம்..!

5

மதுராந்தகம் அருகே உள்ள கிளியாற்று தடுப்பனையில் குளிக்க சென்று மாயமான சிறுவனின் உடலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வீராண குளம் கிராமத்தை சேர்ந்த முகிலன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். முகிலன் தன்னுடைய நண்பர்களுடன் கிழியாற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளான்.

 

தடுப்பணையின் கரை மீது நண்பன் உட்கார்ந்து நிலையில் முகிலன் தடுப்பணையில் குதித்துள்ளான். ஆனால் அவன் நீண்ட நேரமாக வெளியே வராததால் இது குறித்து தீயணைப்பு துறை அரசு தகவல் தெரிவிக்கப்பட்டது. முகிலனின் உடலை இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon