--- --:--:-- --

தரமற்ற சாலை என வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது..!

6

இளையான்குடி அருகே தரமின்றி தார் சாலை அமைக்கப்பட்டதாக கூறி சாலையை கையில் பெயர்தெடுத்த வீடியோ வெளியிட்ட இளைஞர்களை காவலர் கைது செய்தனர்.

 

சிவகங்கை மாவட்டம் பிராமணக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வைகை ஆறு வரை சில மாதங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரம் இன்றி அமைக்கப்பட்டது.

 

ஆதாரத்துடன் நிரூபிக்கும் வகையில் விக்னேஷ் என்பவர் தார் சாலையின் சிறு பகுதியை பெயர்த்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.

 

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon