3 மாநிலத்தில் தோல்வி.. தற்காலிக பின்னடைவு தான் – மல்லிகார்ஜுன கார்கே
தற்காலிக பின்னடைவிலிருந்து மீண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை நிலைநாட்டுவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் தோல்வியை சென்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரசை வெற்றி பெறச் செய்த தெலுங்கானா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
வாக்களித்த நான்கு மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்த கார்கே மூன்று மாநில தேர்தலில் தோல்வி, தற்காலிக பின்னடைவு என்றும் அதிலிருந்து மீண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை நிலைநாட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா கூட்டணி கட்சியினர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுமையாக தயாராக வேண்டும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





