--- --:--:-- --

மாணவியர் விடுதியில் நடக்கும் அவலம்..!

10

திருப்பத்தூரில் பள்ளி சீருடையில் மாணவிகள் தண்ணீருக்காக முண்டியடித்துக் கொண்ட நிலையில் விடுதி வார்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இயங்கி வரும் அரசினர் மாணவர் விடுதியில் 80க்கும் மேற்பட்டோர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதி வார்டனாக இருக்கும் கலைச்செல்வி மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

கால்வாய் அடைப்புகள் அகற்றப்படாமல் உள்ளதால் விடுதியில் துர்நாற்றம் பேசுகிறது எனவும் குப்பைகள் தேக்கி வைக்கப்படுகிறது எனவும் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

நேற்று முதல் மாணவிகள் நகராட்சி மூலம் கொண்டுவரப்பட்ட தண்ணீரை பிடிக்க பள்ளி சீருடைகள் முண்டயடித்துக் கொண்டனர். விடுதிவார்டன் கவனக்குறைவாக செயல்பட்டதால் தான் இந்த அவல நிலை ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon