--- --:--:-- --

உச்சம் தொட்ட தங்க விலை..!

1

தங்கம் விலை கட்டுக்கடங்காமல் செல்வதால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணைத் தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த ஆண்டு இறுதி வரை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை என கூறியுள்ளனர்.திருமண நிகழ்ச்சிக்காக கடன் பெற்று நகை வாங்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

சர்வதேச அளவில் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்க டாலரின் மதிப்பு, மற்ற நாணயங்களுக்கு எதிராக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதன் தாக்கத்தால், பங்குச் சந்தையில் இருக்கும் பணத்தை, பாதுகாப்பானதாக கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வகின்றனர்.

 

எனவே, தங்கத்துக்கான தேவை அதிகரித்ததால் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை வரலாறு காணாத வகையில் முதல் முறை ரூ.47,000-ஐ தாண்டியது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.47,320-க்கு விற்பனையானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon