பிக்பாஸ் 7வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா?

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 7 சீசன் தான் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஓடுகிறது.

 

இந்த 60 நாட்களை எட்டுவதற்குள் அப்பப்பா எவ்வளவு புதிய விஷயங்கள், அதிரடி டாஸ்க்குகள், சண்டைகள், அழுகைகள். வரும் நாட்களில் பிக்பாஸ் என்ன அதிரடி விஷயங்கள் சொல்ல போகிறாரோ, போட்டியாளர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்று டிசம்பர் 2, வார இறுதி நாட்கள் வந்துவிட்டது, இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பது யார் எலிமினேட் என்பதை மட்டும் தான்.

 

இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறியது யார் என்ற விவரம் வந்துள்ளது. அதாவது வனிதாவின் மகள் என்ற அடையாளத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜோவிகா தான் இந்த வாரம் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.