--- --:--:-- --

மாத்திரை வாங்க வந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!

8

ராமநாதபுரம் மருத்துவமனைக்கு மாத்திரை வாங்க வந்த பெண்ணுக்கு மயக்க மாத்திரை கொடுத்து நகைகளை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு முனியம்மாள் என்பவர் மாதாந்திர மாத்திரைகள் வாங்க வந்துள்ளார்.

 

அப்பொழுது அவர் அடையாளம் தெரியாத பெண் அறிமுகம் ஆகிய அவரது மருந்து சீட்டுக்கு மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் ஒரு இடத்தில் அமர வைத்து ஒரு மாத்திரை கொடுத்து சாப்பிட்டு உள்ளார்.

 

அந்த மாதிரி சாப்பிட்டதும் முனியம்மாள் மயக்கம் அடைந்ததாக தெரிகிறது. அவர் கண்விழித்து பார்த்த பொழுது அவர் கழுத்தில் கிடந்த நான்கு சவரன் தங்கச் செயின் கையில் அணிந்து இருந்த மோதிரம் என ஏழு சவரன் நகை திருடு போனது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

Right Menu Icon