தொழிலதிபர் ரத்தினம் வீடு அலுவலகங்களில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை..!
திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் ரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.






