தேசிய அளவிளான கார் பந்தய போட்டி – சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி முதலிடம்
கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜே.கே டயர்ஸ் நடத்திய தேசிய அளவிளான கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி வெற்றி பெற்றார்.
ஜே.கே டயர்ஸ் நடத்தும் 22 ஆவது தேசிய அளவிளான கார் மற்றும் இருசக்கர வாகன பந்தயத்தின் இரண்டாவது சுற்று போட்டிகள் நேற்று முன் தினம் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் துவங்கியது. இந்த போட்டியில் சென்னை, கோவை, தில்லி, மும்பை உள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் போட்டியில் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது.

மிகுந்த உற்சாகத்துடன் துவங்கிய கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த ராகும் ரங்கசாமி சிறப்பாக ஓட்டி 2 ஆவது சுற்றில் பின்தங்கி இருந்த நிலையில், மூன்றாவது சுற்றில் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.அதே போல்,இரு சக்கர வாகன 3ஆவது சுற்று போட்டியில் புனேயை சேர்ந்த தனே கெய்க்வாட் முதல் இடத்தை பிடித்தார். பெங்களூரை சேர்ந்த முசமில் அலி இரண்டாவது இடத்தையும், ஷாசன்கான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

அதே போல் பெண்களுக்கான பிரிவில் வட்தோதராவைச் சேர்ந்த மிரா எர்டா தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். கோவையைச் சேர்ந்த 45 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், அனுஷிரியா குலாத்தி 28 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




