--- --:--:-- --

விசா இல்லாமல் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி..!

8

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து மக்கள் விசா இல்லாமல் தனது நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதித்துள்ளது.

 

சீனாவிற்கு நுழைபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது.

 

அந்த கட்டுப்பாடுகள் துவக்கத்தில் நடத்தப்பட்ட நிலையில் ஆறு நாட்டு மக்களுக்கு விசா இல்லாமல் நுழைய சீனா அனுமதி அளித்துள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சீனாவிற்குள் 15 நாட்கள் விசா இல்லாமல் தங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி ஒரு வருடத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது.

 

Right Menu Icon