தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!
சென்னை குன்றத்தூரில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். குன்றத்தூரில் நபர் ஒருவர் தான் புதிதாக கட்டிய வீடு கிரகப்பிரவேசம் செய்துள்ளார்.
அப்பொழுது அந்த வழியாக வந்த மாடு வீட்டில் முன்பகுதியிலிருந்து வாழை மரத்தின் கிளைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்து தண்ணீர் தொட்டிக்குள் தவறுதலாக விழுந்தது.
இது குறித்து வீட்டு உரிமையாளர் கொடுத்த தகவலின் பெயரில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டியில் காங்கிரீட் மேல் தளத்தை உடைத்து பசுமாட்டை மீட்டனர்.






