அதிவேகத்துடன் முந்த முயன்ற பஸ் லாரி மீது மோதி கோர விபத்து..!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனியார் பேருந்து எதிரே வந்த லாரி மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர் மலை பாதையில் லாரி ஒன்று பிரேக் டவுன் ஆகி இடது புறமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அது குறுகிய சாலையில் பவானி நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுனர் சாலையின் வலது புறமாக ஏறி கடக்க முயற்சி செய்துள்ளார்.
அப்பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் லாரியின் மீதும் மோதியது. லாரி ஓட்டுநர் சகாதேவன் பைக்கில் வந்த தனபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.






