வானிலை காரணமாக திசை திருப்பி வேறு ஊருக்கு தரை இறக்கிய விமானத்துறை..!
அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த விமானம் வேறு ஊருக்கு திருப்பி விடப்பட்டதால் கடுப்பான பெண் ஒருவர் தன்னை கடத்தி செல்கிறார் என கூறி விமானத்தினுள் ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்து ஒரு பெண் விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வானிலை காரணமாக செல்லாமல் விமானம் டெல்லாஸ் நகருக்கு புறப்பட்டது. இதனால் கடுப்பான பெண் விமான ஊழியர்களிடம் சண்டையிட்டார்.
அத்துடன் அவர் ஒவ்வொரு சீட்டாக தாவி குதித்து தன்னை காப்பாற்றும்படி கூறிவிட்டார். மேலும் தன்னை கடத்திச் செல்கிறார்கள் எனக் கூறி ஊழியர்களையும் தாக்கினார். பின்னர் அவரை கட்டுப்படுத்திய ஊழியர்கள் தரையிறங்கியதும் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





