சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து..!
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைத்து வரும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவமனையின் ஆர்த்தோ வார்டில் உள்ள ஏசி எந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் மாடியில் இருந்து நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.





