ரசகுல்லாவுக்காக திருமணத்தில் நடந்த சம்பவம்..6 பேர் காயம்..!
திருமண நிகழ்ச்சியில் ரசகுல்லா தீர்ந்ததால் மோதல் ஏற்பட்ட சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். உத்தர பிரதேச மாநிலம் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்பொழுது இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் உறவினர்கள் அந்த பகுதி மக்கள் மற்றும் பலர் என பங்கேற்றனர். இரவு உணவு பல்வேறு உணவு வகைகள் ரசகுல்லா உட்பட இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன. அப்பொழுது ரசகுல்லா இனிப்பு தீர்ந்து விட்டது. இது குறித்து திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது. அதில் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் இந்த சம்பவத்தில் ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






