--- --:--:-- --

விபத்தில் சிக்கிய இளைஞர்.. ஆம்புலன்ஸில் ஏற மாட்டேன் என கூறி மதுபோதையில் வாக்குவாதம்..!

2

நெல்லை மாவட்டத்தில் வாகன விபத்தில் காயமடைந்த இளைஞர் ஆம்புலன்ஸில் ஏற மறுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். சிறுகுறிங்குடி அருகே உள்ள மயிலாடி கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் அர்ஜுன். இவர் உறவினரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.

 

அப்பொழுது வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் சென்ற கார் மீது இளைஞர் அர்ஜுன் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த பொழுது இளைஞர் அர்ஜுனனின் கால் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

 

இதனை பார்த்து அருகில் இருந்த பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வந்தடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சைக்காக இளைஞரை அதில் ஏற்ற முயன்றனர்.

 

ஆனால் காயமடைந்த இளைஞர் மது போதையில் இருந்ததால் ஆம்புலன்சில் ஏற மறுத்ததுடன் நான் ஒன்றும் இறந்துவிடவில்லை எனக்கூறி அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்வடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றனர்.

 

ஆனால் அப்பொழுதும் ஆம்புலன்ஸில் ஏற மறுத்த இளைஞர் பிடிவாதம் செய்தார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் இளைஞரை குண்டுகட்டாக தூக்கி ஆம்புலன்சில் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon