தீபாவளி கூட்டத்தில் காணாமல் போன சிறுவனை மீட்ட காவலர்..!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்தில் தீபாவளி நெரிசலில் தனியாக சிக்கி தவித்த குழந்தையை பெற்றோரிடம் காவல் ஆய்வாளர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.
பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மூன்று வயது சிறுவனை சிறப்பு ஆய்வாளரிடம் பொதுமக்கள் நடந்ததை கூறி ஒப்படைத்தனர். உடனடியாக பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்த சிறுவனை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்ற அவர் பாத்திரக்கடையில் இந்த குழந்தையின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி ஒப்படைத்தார்.





