--- --:--:-- --

சேதம் அடைந்த வகுப்பறைகள்.. ஆபத்தான முறையில் பாடம் பயிலும் மாணவர்கள்..!

3

வேலூர் மாவட்டத்தில் சேதம் அடைந்த வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்து தரவேண்டும் என பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

 

கே.வி.குப்பம் அடுத்த வடக்கன் தாங்கல் ஊராட்சி உள்ளது. அரசினர் மேல்நிலைப்பள்ளி இங்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 851 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 

கடந்த 1998 ஆம் ஆண்டு உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை சுமார் 5 லட்சம் மதிப்பில் கூடுதல் நான்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

 

வகுப்பறைகள் கட்டி சுமார் 25 ஆண்டுகள் ஆன நிலையில் கட்டடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் உள்ளது. இது குறித்து பள்ளி தரப்பில் அளிக்கப்பட்ட தகவலின் படி நிகழ்விடத்திற்கு வந்த பொது பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என கூறிவிட்டு சென்றுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon