--- --:--:-- --

விபத்தில் உயிரிழந்த கப்பல் மாலுமி..நேரில் சென்று நிவாரணம் வழங்கிய கனிமொழி..!

6

தூத்துக்குடி மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்து உடல் உறுப்புகளை தானம் செய்தோரின் குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை கனிமொழி எம்பி வழங்கினார்.

 

கடந்த மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் கப்பல் மாலுமி வசந்தன் படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஐந்தாம் தேதி உயிரிழந்தார். அவரது கண்கள், இதயம், சிறுநீரகம் உட்பட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

 

பின்னர் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கப்பல் மாலுமி வசந்தன் சந்தித்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 

சாலை விபத்தில் உயிரிழந்த அவர்களின் குடும்பங்களை கனிமொழி நேரில் சந்தித்து இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon