தீபாவளியை முன்னிட்டு களை கட்டிய மாட்டுச் சந்தை.. 3 கோடி ரூபாய்க்கு விற்பனை..!
தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுக்கோட்டை சந்தைப்பேட்டை மாட்டுச்சந்தையில் மூன்று கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையானது புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் சந்தைப்பேட்டை மாட்டு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
அவற்றை மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். மாட்டுச்சந்தையில் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





