--- --:--:-- --

நிறுத்தி இருந்த கார் தானாக இயங்கி சென்றது எப்படி? பேயின் விளையாட்டா?

4

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் காரின் உரிமையாளர் ஒருவர் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். அவர் கடைக்குள் சென்ற சிறிது நேரத்தில் எவரும் அருகில் இல்லாத நிலையில் கார் தானாக ஓட துவங்கியது.

 

சாலையைக் கடந்து சென்ற அந்த கார் அந்த பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் இடது புறம் உள்ள கால்வாயில் உள்ளே குப்புற விழுந்து விபத்திற்கு உள்ளானது. கார் கால்வாய்க்குள் விழுந்ததை பார்த்து கல்லூரி மாணவி கூச்சலிட்ட நிலையில் கார் எங்கு சென்றது என்பது தெரியாமல் திகைத்து நின்றனர்.

 

பின்னர் அந்த மாணவி சுட்டிக்காட்டியதை அடுத்து கால்வாய்க்குள் விழுந்த காரை மீட்க நடவடிக்கையும் மேற்கொண்டனர். சம்பவம் நடந்த பொழுது அந்த சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon