கேரள தங்க கடத்தல் வழக்கு.. 44 பேருக்கு ரூ.66 கோடி அபராதம்..!
கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய சொப்னா சுரேஷ் சிவசங்கர் உட்பட 44 பேருக்கு 66 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரங்கேறிய தங்க கடத்தல் வழக்கில் மாநில முதலமைச்சரும் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.
ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரிக்க சுங்கத்துறை வழக்கில் தொடர்புடைய 44 பேருக்கும் 64 கோடியே 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக முக்கிய குற்றவாளி சுரேஷுக்கு மட்டும் ஆறு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால் ஜிஎஸ்டி தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் சுங்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் விமான நிலையத்தின் கார்கோ காம்ப்ளக்ஸ் இருக்கிறது. அங்கு 30 கிலோ 245 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





