--- --:--:-- --

ஊருக்குள் புகுந்து நாயை விரட்டிய சிறுத்தை.. பதற வைக்கும் காட்சி..!

1

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது. அம்பிகாபுரம், காளியம்மன் கோயில் அருகே முருகன் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த நாயை விரட்டி சென்றுள்ளது.

 

அந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பகலிலேயே சிறுத்தை நடமாடுவது அந்த பகுதியினரை அச்சமடையச் செய்துள்ளது.

 

தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும் என குன்னூர் வனச்சரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுத்தையை விரைந்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon