--- --:--:-- --

கள்ளக்குறிச்சி எஸ்.பி.யின் திடீர் ஓய்வு..!

7

கள்ளக்குறிச்சி எஸ்.பி. மோகன்ராஜ் விருப்ப ஓய்வு குறித்து பரவும் தகவலுக்கு டிஜிபி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. காவல்துறையில் கடந்த 1987 ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த மோகன்ராஜ் சென்னை, மதுரை, கோவை, சேலம், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார்.

 

இவர் ஜனவரி மாதம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றார். அதற்கான திடீரென விருப்ப ஓய்வை அறிவித்துள்ளார். காவல்துறையில் சுமார் 36 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி இருந்த மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாக பணி ஓய்வு பெற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

 

இது குறித்த விளக்கம் அளித்த டிஜிபி அலுவலகம் கள்ளக்குறிச்சி மோகன்ராஜ் விருப்ப ஓய்வு கேட்டு உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுகிறது எனவும் அதனை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon