சிவகாசியில் பட்டாசு குடோனுக்கு சீல்..!
சிவகாசியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த அற்புதகுமார் என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
இவர் பட்டாசு கடைக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி உரிமம் இல்லாத குடோனில் பதுக்கி வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பட்டாசு கடை குடோனில் ஆய்வு செய்தனர்.
அதனால் அந்த பட்டாசு கடை உரிமையாளர் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பட்டாசு கடை உரிமையாளர் அற்புதகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





