--- --:--:-- --

விமான ஓடுதளத்தில் விமானத்தை நிறுத்தி ஏற முயன்ற பெண்..!

10

ரயில் பேருந்துகளில் ஓடிப்போய் பிடிக்க முற்படுவது போல் விமானத்தை பிடிப்பதற்காக பெண் ஒருவர் ஓடுதளத்தின் வரை சென்ற விமானத்தை நிறுத்திய சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

 

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் ஒரு பெண் பயணி தனது விமானத்தை பிடிப்பதற்காக கட்டுப்பாடுகளை தாண்டி ஓடுதளம் வரை சென்றார். விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அந்த பெண் விமானத்தில் ஏற முயன்றார்.

 

விமானி அந்த பெண்ணை பார்த்ததும் விமானத்தின் என்ஞ்சினை நிறுத்திவிட்டார். ஆனால் விமான நிலையம் கட்டுப்பாடுகளை மீறியதால் அவர் கைது செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon