ஈரோடு ரயில் நிலையத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்..!
ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் நிபுணர்கள் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் வந்துள்ளனர்.
காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களோடு காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பயணிகளை உடைமைகள் சோதனை நடத்தப்பட்டது.
அத்துடன் ரயில் நிலையத்தில் பயணிகளைத் தவிர மற்றவர்கள் பாதுகாப்பு கருதி அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லாததால் அது பொய்யான தகவல் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதே சமயம் காவல்துறை கட்டுப்பாட்டுறைக்கு வந்த செல்போன் அழைப்பு ஆந்திராவை சேர்ந்தது எனக் கூறிய காவலர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





