ஞாயிறன்று ரேஷன் கடைகள் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளியை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பண்டிகையையொட்டி அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இருப்பை பராமரிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வட கிழக்கு பருவமழையும் தொடங்க உள்ளதால் எந்த நாட்களில் மக்கள் பொருட்கள் கேட்டாலும் கொடுக்க தயாராக இருப்பதாக விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏதாவது சிரமம் இருந்தால் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





