அனைத்து பேருந்துகளிலும் வரும் 31ஆம் தேதிக்கு சிசிடிவி கேமரா பொருத்தப்படும்..!
கேரளாவில் அனைத்து பேருந்துகளிலும் வரும் 31ஆம் தேதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் கேமராக்களை கொள்முதல் செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டதாகவும் இனி இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு பேருந்தில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் இதன் மூலம் பேருதின் உள்ளேயும் பேருந்துக்கு வெளியேயும் நடக்கும் விதிமீறல்கள் எளிதாக கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து பேருந்துகளிலும் வருகிற 31ஆம் தேதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





