--- --:--:-- --

100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!

6

கொடைக்கானலில் உணவு கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலகம் நடத்திய சோதனையில் கெட்டுப்போன 100 கிலோ இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

 

உணவு விடுதிகளில் பழைய உணவுப் பொருட்கள் சுற்றுலா பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது.

 

இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லாரன்ஸ் மற்றும் கொடைக்கானல் நகராட்சி பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் காலாவதியான இறைச்சி, சிக்கன், சப்பாத்தி மாவு, உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. உரிமையாளர்கள் 20 பேருக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon