--- --:--:-- --

ஆயிரம் ரூபாய் பெறாத பெண்கள் ஆதங்கம்.. நாங்கள் எல்லாம் ஓட்டு போடவில்லையா..?

3

மகளிர் உரிமை தொகையை கொடுத்தால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என பணம் பெறாத பெண்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளிக்க பெண்கள் வந்திருந்தனர். ஆனால் மனுவை பெறாமல் மனுவை வாங்க மறுப்பதாக மகளிர் குற்றம் சாட்டினர்.

 

மேலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெண்கள் புலம்பியதுடன் பணம் பெற்றவர்கள் மட்டும்தான் ஓட்டு போட்டாங்களா நாங்க எல்லாம் ஓட்டு போடலையா என்று கேள்வி எழுப்பினர். மேலும் கொடுத்தால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் கொடுக்கவே கூடாது என்று ஆதங்கத்துடன் பேசினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon