ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடையக் கூடாது..!
ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தமடைய கூடாது என்ற வகையில் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் 1,763 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அரசு வேலைவாய்ப்பு, நான்கு விழுக்காடு, இட ஒதுக்கீடு உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த குழு மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை முழுமையாக அனுபவிக்கும் வகையில் உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





