--- --:--:-- --

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் உயிரிழப்பு..உடல் இன்று தகனம்..!

6

டல்நல குறைவு காரணமாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் தான் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. முதுமை காரணமாக உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

 

டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த எம்.எஸ்.கில் தான் கடந்த 2001 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

 

2008 ஆம் ஆண்டு மத்திய விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்தார். மறைந்த அவருடைய உடல் டெல்லியில் இன்று தகனம் செய்யப்படுகிறது.

 

Right Menu Icon