குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தந்தை..!
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரிந்து வாழும் முதல் மனைவியை சேர்ந்து வாழ தனது குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீடியோ காலில் அழைத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
அல்லிநகரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் – ராதிகா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மது குடிக்கும் பழக்கம் இருப்பதோடு சந்தோஷ்குமார் இரண்டாவதாக ஒரு திருமணமும் செய்துள்ளார்.
இதனால் சென்னையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ராதிகா சென்ற நிலையில் தன்னுடன் சேர்ந்து வாழ மீண்டும் வரவேண்டும் என வீடியோ காலில் அழைத்த பொழுது குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா குழந்தைகளை எதுவும் செய்ய வேண்டாம் என்றும் உடனடியாக புறப்பட்டு ஊருக்கு வருவதாகவும் தெரிவித்தவாறு இந்த சம்பவத்தை மற்றொரு செல்போன் மூலம் பதிவு செய்து வீடியோ, வாட்ஸப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இது குறித்த புகாரில் சந்தோஷ்குமாரை கைது செய்த போலீசார் குழந்தைகளை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.






