--- --:--:-- --

மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாணவியின் சிகிச்சைக்கு உதவ தாய் கோரிக்கை..!

4

விழுப்புரத்தில் மின்சாரம் பாய்ந்து உணர்வற்ற நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஏழாம் வகுப்பு மாணவிக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கம்பம் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தம்பதியினரின் மூன்றாவது மகள் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது தவறுதலாக உயர் அழுத்த மின்கம்பியை தொட்டு தூக்கி வீசப்பட்டார்.

 

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் மதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர். மின்சாரம் தாக்கி தசை பகுதிகளில் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ள நிலையில் நரம்பு மண்டலங்கள் உணரும் தன்மையை அடைய இரண்டு மாதங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இளமதியின் வலது கை மற்றும் கால் செயலிழந்த நிலையில் உரிய சிகிச்சை அளித்தால் குணமடைய வாய்ப்பிருப்பதாகவும் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் படியும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

 

Right Menu Icon