ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கிய 2 கருப்பு பைகள்..!
அண்ணா நகரில் உள்ள பரணி பில்டர்ஸ் கட்டுமான நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களுக்கு சொந்தமான பரணி பில்டர்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மூன்றாவது நாளாக நடந்த சோதனை பிற்பகலில் நிறைவேற்றது. இந்நிலையில் ஜெகத்ரட்சகன் எம்பி வீட்டில் நடந்த சோதனை இரண்டு கருப்பு பைகள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பைகளில் ஆவணங்கள் இருந்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





