--- --:--:-- --

பேக்கரியில் பப்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

6

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பேக்கரியில் பப்ஸ் சாப்பிட்ட மூன்று சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பேக்கரியில் சோதனை நடத்திய அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

கொங்கணாபுரத்தில் உள்ள பேக்கரி கடையில் மடதூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் அவரது குழந்தைகளுக்கு பப்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இளம் நிலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து பேக்கரி ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுகாதாரமற்ற முறையில் பப்ஸ், கேக். பிரெட் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் பொருட்களை பறிமுதல் செய்து பேக்கரிக்கு சீல் வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon